எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு
ஆகஸ்டு திங்கள் 18-08-2024 நாளன்று சொல்லாடும் முன்றிலின் முதலாம் ஆண்டுவிழா மற்றும் கவிஞர் மகுடேசுவரனாரின் “சிங்கப்பூர் கண்டதும் கற்றதும்” நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. தமிழ்ப்பட்டிமன்றக் கலைக்கழகம் ஏற்பாட்டில் இந்நிகழ்ச்சி சிங்கப்பூர் உமறுப்புலவர் நிலையத்தில் நடந்தேறியது.
கவிஞரிடம் தமிழ் பயின்ற மாணவர்கள் இணைந்து “கவிஞர் மகுடேசுவரன் மாணவர் பாசறை” என்ற பெயரில் தமிழ் சார்ந்த செயல்களை முன்னெடுத்து வருகின்றனர்.
மொழியறிஞர் சிங்கப்பூர் வருவது உறுதியானவுடனேயே மாணவர் பாசறை சார்பாக அவரது படத்தை வரைந்து நினைவுப் பரிசாகத் தருவது என முடிவெடுக்கப்பட்டது.
கவிஞரை முகநூலில் பின்தொடரும் பலருக்கும் தெரியும் கவிஞர் பல நூற்றுக்கணக்கான கலைச்சொற்களை ஆக்கியளித்துள்ளார். வருங்கால தலைமுறையினருக்கு மிகவும் பயன்படும் இப்பெருஞ்செயலைப் போற்றும் வகையில்
இணையம், சமூக ஊடகங்கள், உணவுப் பொருள்கள், மட்டைப்பந்தாட்டம் போன்ற பல்வேறு துறைகளில் கவிஞர் ஆக்கியளித்ததும், அடையாளங்கண்டு முன்மொழிந்ததுமான நூறு
கலைச்சொற்கள் தெரிவு செய்யப்பட்டன.
கவிஞரது முகமும் சுற்றிலும் பொருத்தமான நிறமுடைய கலைச்சொற்களுடன் இவ்வோவியம் கிட்டத்தட்ட பத்து மணிநேரத்தில் “கவிஞரும் கலைச்சொற்களும்” என்ற தலைப்பில் மாணவர்களில் ஒருவரும் ஓவியருமான இரா.அபிராமியாரால் அணியமாக்கி, அழகிய சட்டகமிடப்பட்டு விழாவன்று அன்புப்பரிசாக அளிக்கப்பட்டது.
இவ்வோவியத்திலுள்ள கலைச்சொற்களையும் அவற்றிற்கு இணையான ஆங்கிலச் சொற்களையும் இங்கே பார்க்கலாம்.
1. வாழ்க வளனுடன் - Wishing you an auspicious life ( Blessing/ Wishes)
2. உவப்பீகை - Tips
3. நன்னிகழ்வு - Auspicious function
4. மணத்தெளிகை - Perfume
5. நகைக்குறி - Smiley
6. உணர்குறி - Emoticon
7. என்வினவி - whatsapp
8. தானிழுனி - Autorickshaw
9. பற்பிணை - Zip/Zipper
10. துயரீடு - Relief Fund
11. பண்சிட்டு - Twitter
12. தீங்கிரை - Victim
13. இன்னதிர்ச்சி - Surprise
14. களிநயம் - Interesting
15. களிக்கேடு- Boredom/Boring
16. இயல்முறி செய்தி - Breaking News
17. கவலற்க- Do not worry
18. கடசான்று - Passport
19. பணிப்பு - Order
20. உழுனி - Tractor
21. குற்றொளி - Reels
22. தற்படக்கோல் - Selfie stick
23. ஏற்றுகை அட்டை - Boarding pass
24. தன்வெறி - Ego/ Egoistic
25. கொள்வெறி - Possessive/ Materialistic
26. தொண்ணூற்றுப்பொடியர் -90s Kids
27. ஈராயிரக்குழவியர்- 2K kids
28. களித்தொல்லை - Prank
29. ஒறுப்பீடு - Penalty/Fine
30. எரிகுமிழ் - Spark plug
31. பறப்புறுதி - is this also boarding pass?
32. புறத்தாங்கி - Side stand
33. காவுலா - Patrol
34. நடுத்தாங்கி - Center stand
35. எரிநெய்ச்சாவடி - Gas / Petrol station
36. திறன்வகுப்பு - Smart classroom
37. தரமொழி - Reviews
38. கணப்பி - Heater
39. வல்வழிப்பிழைப்பு - Thug life
40. பன்மாடத்திரையரங்கு - Multiplex Cinemas
41. பனிக்களி - Icecream
42. மாச்சில் - Biscuit
43. முறிநோன்புணவு - Breakfast
44. முறுக்கினி - Jangiri
45. முந்திரிப்பாற்கட்டி - Kaju katli
46. பாகூறிக்குண்டு - Gulob jamun
47. இன்னுருண்டை - Laddu
48. அடுக்குப்பொதியன் - Sandwich
49. அவிகலன் - Steamer / Pressure cooker
50. திருவளத்தான் - Comedian
51. தோன்றெழில் - Pose
52. புனைமருட்சி -Fictional Thriller
53. கருவிசை - Theme music
54. துய்வலி - Hangover
55. திறன்மாநகர் - Smart city
56. வினைக்கலன் வியன்விழா - Ayutha Pooja
57. நிறச்சீர்மை- Color correction
58. திரைச்சுடுவு - Screenshot
59. நகைப்பழிகை - Memes
60. களவளாவல் - Dating
61. மீப்பரவல் - Viral
62. தன்வரம்புரை- Disclaimer
63. விற்பேற் - Brand
64. முழுவல்லார் -All rounder
65. சுழிப்பலி - Duck out
66. நிகழ்சொற்றி - Live commentary
67. நூற்றீடு - Century
68. அரை நூற்றீடு - Half century
69. வீசுகளம் - Pitch
70. ஆட்டமிழப்பு -Out
71. முக்குச்சி - Wicket
72. நடுக்குச்சி - Middle Stump
73. உள்நாட்ட வீச்சு - In swinger
74. வெளிநாட்ட வீச்சு - Out Swinger
75. வீழ்வெற்றலகு- Maiden Over
76. கால்புறம்- Leg Side
77. எதிர்ப்புறம் - Off Side
78. முக்குச்சிக்காப்பான் - Wicket Keeper
79. எல்லை - Boundary
80. முன்கால்வைப்பு - One Step Forward
81. செந்திருப்பு - Square Cut
82. ஓட்டம் - Run
83. பந்தாள் - Bowler
84. மட்டையாள் - Batsman
85. களத்தர் - Fielder
86. எகிறன் - Bouncer
87. கொக்கியடி - Hook Shot
88. துடுப்பு வலிப்படி - Sweep Shot
89. இழுப்படி - Pull Shot
90. நேர்செலுத்தடி - Straight Drive
91. நேர்க்கூர் எறி - Yorker
92. ஓடுபலி - Run Out
93. வெளிவிலகுச் சுழல் - Leg Spin
94. உள்விலகுச் சுழல் - Off Spin
95. மேல் முறையீடு - Appeal
96. ஓட்ட ஈட்டுகை - Run Rate
97. வேட்பீட்டுகை - Required Run Rate
98. குருத்து - Bail
99. பிறழ்சுழல் - Doosra
100. அழகிதழகிது - Awesome / Marvellous
Copyright © 2024 magudeswaran.com - All Rights Reserved.
இணையதள போக்குவரத்தை பகுப்பாய்வு செய்வதற்கும் உங்கள் இணையதள அனுபவத்தை மேம்படுத்துவதற்கும் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். எங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்வதன் மூலம், உங்கள் தரவு மற்ற எல்லா பயனர் தரவுகளுடன் ஒருங்கிணைக்கப்படும்.